கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. 

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

 பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. அற்ப சுகத்துக்காக கணவனோ, மனைவியோ வேறு ஒருவரின் உறவை நாடும் போது அது பெரும் விவகாரத்தில் முடிந்துவிடுகிறது. ஐந்து நிமிட சுகத்திற்காக ஒட்டுமொத்த குடும்ப கௌரவம், குடும்ப மானம் காற்றில் பறக்க விடப்படுகிறது. இதுபோன்ற ஒழுக்கக் கேடுகளை தடுக்க சட்டத்தை கடுமையாக்க தண்டனைகள் வெண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலனுடன் உறவை தொடர்ந்த மனைவி அதற்கு தடையாக இருந்த கணவனை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

முழு விவரம் பின்வருமாறு:- கர்நாடக மாநிலம் மைசூர் ஹெச்.டி கோட் தாலுக்கா, அகசன ஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த கெம்பே கவுடா மகள் ஷில்பா , இவருக்கும் மைசூர் மாவட்டம் ஹூனசூர் தாலுகா ஹூண்டி மாலா கிராமத்தைச் சேர்ந்த லோகமணி (35) என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஷில்பா திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டில் வசித்து வந்த அபிநந்தன் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் ஷில்பாவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

குடும்பத்தினரின் வலுகட்டாயத்தின் பேரில் யோக மணியை திருமணம் செய்துகொண்டார் சில்பா, ஆனால் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த ஷில்பா திருமணத்திற்கு பின்னரும் அபிநந்தனை காதலித்து வந்தார். இருவரும் தொலைபேசியில் உரையாடி வந்தனர், வீட்டில் கணவன் இல்லாத போது காதலனை வீட்டுக்கே வரவழைத்த மகிழ்ச்சியாக இருந்து வந்தார் ஷில்பா. தொடர்ந்து காதலன் அபிநந்தனுடன் வாழ முடிவு செய்த ஷில்பா கணவனை கொலை செய்ய முடிவு செய்தார். கணவன் லோக மணியை ஒழித்துக் கட்டிவிட்டால் மகிழ்ச்சியாக வாழலாம் என எண்ணினர். இலைகள் லோகமணியைஉணவில் விஷம் கலந்து சாப்பிடக் கொடுத்தார், கணவரும் லோகமணியும் மனைவி கொடுத்த உணவை ருசித்து சாப்பிட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து உயிரிழந்தார்.

கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறி சில்பா கதறி அழுதார், எல்லோரும் அவரது நடிப்பை உண்மை என்று நம்பிவிட்டனர்.ஆனால் சில நாட்களில் ஷில்பாவிடம் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த லோக மணியின் தாய் தன் மகன் மருமகள் ஷுல்பாவால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்தார், பின்னர் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஷில்பா மற்றும் அவரது காதலனை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர் அப்போது கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்ததை ஷில்பாவும் அவரது கள்ளக்காதலனும் பெற்றுக்கொண்டனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.