மாநிலங்களவை தேர்தலில் கிடைக்காத வாய்ப்பு.. திமுகவிலிருந்து விலகுகிறேனா.? தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி விளக்கம்

 தேனியைப் பொருத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறோம்.  அதனால் எங்களுக்குள் (வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள்) எந்தப் பிரச்சனையும் இல்லை.

Have I left from DMK? Thanga Tamilselvan explain..!

நான் திமுகவிலிருந்து விலகிவிட்டேன் என்று அவதூறு செய்தியைப் பரப்பி வருகிறார்கள் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளை நிரப்புவதற்கான தேர்தலில் திமுக சார்பில் ராஜேஷ்குமார், தஞ்சை கல்யாணசுந்தரம், கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில்  திமுக மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தேர்தலில் அவருடைய பெயர் அறிவிக்கப்படவில்லை. இதனால், தங்கத் தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேனி மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம் கிராமம் வழியாக செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

Have I left from DMK? Thanga Tamilselvan explain..!

இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறையே  முழுமையாக எடுத்து கொண்டு அந்தச் சாலையைச் சீர் செய்து தர வேண்டும்.‌ ஆதிபட்டி கிராமம் வழியாக செல்லும் புதிய புறவழிச்சாலையில் பூதிப்புரம் கிராம மக்கள் பயணிக்க வேண்டும் என்றால் பல கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே பூதிப்புரம் கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புறவழிச்சாலையை இணைக்கும் விதமாக இணைப்புச் சாலை ஒன்றை அமைக்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். என்னைப்  பற்றி சமூக வலைதளங்களில் வரும் கருத்துகள் அதிகப் பார்வையாளரை பெறுகிறது. 

Have I left from DMK? Thanga Tamilselvan explain..!

இதில் சிலர் நான் ராஜ்ய சபா எம்.பி.யாகப் போகிறேன் எனக் கூறி வந்தார்கள். தற்போது நான் திமுகவிலிருந்து விலகிவிட்டேன் என்று அவதூறு செய்தியையும் பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் நான் புகார் அளித்துள்ளேன். அந்தப் புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். தேனி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றப்படும் என்ற ஊகத்துக்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது. தேனியைப் பொருத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறோம்.  அதனால் எங்களுக்குள் (வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள்) எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios