குடும்ப அட்டை இருந்தால் போதும் அதனை கூட்டுறவு வங்கிகளில் காட்டி எளிமையாக கடை ரூ.50 ஆயிரம் கடனை பெற்றுச் செல்லலாம் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு  முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. குற்இப்பாக தமிழகம் வறுமையில் மூழ்கித் தவிக்கிறது. வேலைவாய்ப்பின்மையால் பொருளாதாரம் சரிந்து மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அன்றாட வாழ்க்கையை நகர்த்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். அப்போது, முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதிகள் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ரூ.50,000 பெற்று கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:- ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..?