அரியானாவில் கொரோனா தடுப்பூசி கோவக்சின் போட்டுக் கொண்ட சுகாரதார அமைச்சர் அணில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவம்பர் 20-ம் தேதி, அரியானாவின் சுகாதார அமைச்சரான அணில் விஜ், பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தடுப்பூசியினை எடுத்துக் கொண்டார். கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு தனது மாநிலத்தில் முதல் தன்னார்வலராக இருப்பார் என்று அவர் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அம்பாலாவில் உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். தன்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

முதல் இரண்டு கட்ட சோதனைகளில் 1000 பேருக்கு மேல் இந்த கோவிக்ஸின் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் நல்ல முடிவுகள் கிடைத்ததால்தான் மூன்றாம் கட்ட சோதனைக்கு ஒப்புதல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.