இதற்கிடையில் ஹரிநாடாரின் காதலி என கூறிக்கொண்டு மலேசியாவில் இருந்து வந்திருப்பதாக மஞ்சு என்ற பெண் ஊடகங்களில் பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சீமானுக்காகவும், நாடார் சமுதாயத்திற்காகவும்தான் ஹரிநாடார் குரல் கொடுத்தார். அதனால் தான் இன்று சிறையில் இருக்கிறார். ஆனால் அவருக்கு உதவி செய்ய எவருமே வரவில்லை என குற்றஞ்சாட்டி வருகிறார்.
ஹரி நாடாரை எனக்காக நான் குரல் கொடுக்க சொல்லவே இல்லை, அவராகவே ஏதோ பேசி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் என சீமான் விமர்சித்துள்ளார். தன்னையும் தனது குடும்பத்தையும் விஜயலட்சுமி இழிவாக பேசி வருகிறார், அதை தாங்களே பொருட்படுத்தாத நிலையில் இதில் ஹரி நாடார் தலையிட என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால்தான் தான் கைது செய்யப்பட்டதாக ஹரி நாடார், அவரது மனைவி என்று கூறிவரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சுவும் தெரிவித்து வரும் நிலையில் சீமான் இவ்வாறு வினவியுள்ளார்.
நெல்லை மாவட்டம் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிநாடார். சிறுவயது முதலே மும்பை சென்று பின்னர் அங்கிருந்து சென்னை வந்து செட்டில் ஆனவர் ஆவார். வட்டி தொழில் செய்து அதன்மூலம் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. அதில் பலருக்கு வட்டிக்கு பணம் தருவதாக கூறி அவர்களிடம் பல்வேறு வகையில் மோசடி செய்து அதன் மூலம் தொழிலதிபர் ரேஞ்சுக்கு அவர் உயர்ந்ததாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதைத்தொடர்ந்து ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து பனங்காட்டு படை என்ற கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார் ஹரிநாடார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 37 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இதனால் நாடார் சமூகத்தினர் மத்தியில் பிரபலமானார்.

கிலோ கணக்கில் நகைகளை அணிந்து வளம் வரும் நபராக அவர் இருந்ததால் பலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவரானார் ஹரி நாடார். பிக்பாஸ் பிரபல பிக்பாஸ் நடிகை வனிதாவுடன் ஜோடி சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் லோன் வாங்கி தருவதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த வெங்கட்டராமன் சாஸ்திரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் அவரை கைது செய்தனர். அதனால் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முன்னதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவான்மியூர் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரேநாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் விஜயலட்சுமி. அதற் பிறகும் தொடர்ந்து சீமான், அவரது தாயாரை அவர் ஒருமையில் பேசி வந்த நிலையில், ஹரி நாடார் சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி மிரட்டும் வகையில் வீடியோ ஒன்று வெளியிட்டார்.
அந்த வீடியோவை மேற்கோள்காட்டி சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் என்பவர் தன்னை மிரட்டுகிறார். ஹரி நாடார், சதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. ஆனால் அந்த புகார் தொடர்பாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் போலீசார் ஹரிநாடார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயலட்சுமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் ஒருகட்டத்தில் ஹரி நாடார் மீதான வழக்கை போலீசார் தூசு தட்டினார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக 506 (1), 506 ஆகிய இரு பிரிவுகளிலும், பெண்களுக்கு எதிராக வன்முறை தடுப்புப் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பெங்களூரு சிறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று திருவான்மியூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஹரிநாடாரின் காதலி என கூறிக்கொண்டு மலேசியாவில் இருந்து வந்திருப்பதாக மஞ்சு என்ற பெண் ஊடகங்களில் பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சீமானுக்காகவும், நாடார் சமுதாயத்திற்காகவும்தான் ஹரிநாடார் குரல் கொடுத்தார். அதனால் தான் இன்று சிறையில் இருக்கிறார். ஆனால் அவருக்கு உதவி செய்ய எவருமே வரவில்லை என குற்றஞ்சாட்டி வருகிறார். அதேபோல் ஹரி நாடார் தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம், சீமானுக்காகதான் குரல் கொடுத்தேன், ஆனால் இப்போது சிறையில் உள்ள தன்னை மீட்க எவரும் உதவி செய்ய வரவில்லையே என நொந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில்தான் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கப்பட்டது. அதில் ஹரி நாடார் தங்களுக்காக குரல் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நகைத்தபாடியே பதிலளித்த சீமான், ஹரி நாடாரை நான் எனக்காக குரல் கொடுக்க சொன்னேனா? அவனை எனக்காக குரல்கொடுக்க சொல்லவே இல்லை, ஆனால் அவராகவே ஏதோ பேசி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார். விஜயலட்சுமி என்னையும் எனது குடும்பத்தையும் இழிவாக பேசி வருகிறார். நாங்கள் அதை கண்டுகொள்வதில்லை, பொருட்படுத்துவது இல்லை, அப்படியிருக்க ஹரிநாடார் விஜயலட்சுமிக்கு ஏன் அட்வைஸ் செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டு இப்போது மாட்டிக்கொண்டு, நான் சீமானுக்காகத்தான் பேசினேன் என்று கூறிவதா.? அவரைப் எனக்காக நான் பேசச் சொன்லவே இல்லை என விமர்சித்துள்ளார்.
