விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் மீது பாலியல் புகார் அளித்த மகளிர் அணி நிர்வாகி அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் மீது பாலியல் புகார் அளித்த மகளிர் அணி நிர்வாகி அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாமக எம்எல்ஏவாக இருந்த விஏடி கலிவரதன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் மகளிரணி செயலாளர் காயத்ரியிடம் 5 லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், காயத்ரியியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு காயத்ரி கடந்த வாரம் புகார் அளித்தார். ஆனால் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நவம்பர் 30ம் தேதி விழுப்புரம் எஸ்.பி.யிடம் காயத்ரி பாலியல் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று இரவே மாநில தலைவர் எல்.முருகன் ஒப்புதலோடு காயத்ரி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து கலிவரதன் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில்;- பாஜக மாநில தலைவர் எல். முருகன் ஜி, மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஜி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஜி, மாவட்டப்பொறுப்பாளர் ரவிஜி அவர்களின் ஒப்புதலோடு... மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவரிடம் பாஜக நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பாலியல் புகார் சொன்ன பெண்ணை, அவர் யார் மீது புகார் சொன்னாரோ அவரே நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 1, 2020, 5:52 PM IST