தமிழக அரசியலில் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்னார் அதிமுக திமுகவை விட்டுக்கொடுக்காமல் மலுப்பலாக கூட்டணி குறித்து பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பதிலடி கொடுத்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இனி தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.அண்மைக்காலமாக விநாயகர் சிலை, இ-பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக அதிமுக கூட்டணியில் பிரச்சனை நீடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பாஜகஅதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி தொடரும் என முதல்வர் பழனிசாமியும் பாஜக தலைவர் எல்.முருகனும் தெரிவித்தனர்.

முத்தலாக் விசயத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக பேசியவர் அன்வர் ராஜா.இதன் காரணமாக மத்திய அரசு அவர் மீதுகடும் கோபத்தில் இருந்தது.அதிமுக வழிகாட்டுக்குழுவில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கிடைக்கும்  அதில் அன்வர்ராஜா இடம் பெறுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் அவரது பெயர் இடம் பெறாமல் போனது ஏமாற்றம் அளிக்கப்பட்டது.


முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது.. பாஜக தயவு இல்லாமல் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.அதிமுக திமுக ஆகிய கட்சிகள் ஆட்சி அமைக்க பாஜக தேவைப்படும். அப்போது திமுகவோடு பாஜக கூட்டணி வைக்கும்.என மலுப்பலான பதில் அளித்தார் அவர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, “2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும். கூட்டணியை விட்டு பாஜக போனால் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.