உலகநாயகன் கமலஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து ஆரம்பித்தார். பின் அப்துல்காலமின் சகோதரர் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குவது குறித்து கமல் கூறியபோது, 'பிரமிப்பூட்டும் எளிமையை, கலாமின் இல்லத்திலும் இல்லாதாரிடமும் கண்டேன். கலாமின் பயணம் எங்கு துவங்கியதோ அதே இடத்தில் நானும் என் பயணத்தை தொடங்குவதை நினைத்து பெருமையடைவதாக கூறினார்.

இதைதொடர்ந்து சற்று நிமிடத்திற்கு முன் தன்னுடைய கட்சியின் பெயர் 'மக்கள் நீதி மய்யம் என அறிவித்து தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். 

இந்த கொடியின் நடுவில்... 6 முனைகள் கொண்ட நட்சத்திரம் அதை சுற்றி கருப்பு நிறத்தில் வட்டமும் உள்ளது... அதனை சுற்றி சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கைகளை கோர்ப்பது போல் சின்னம் இடம்பெற்றுள்ளது. இதில் கட்சியின் பெயரான 'மக்கள் நீதி மய்யம்' என்கிற பெயரும் இடம்பெற்றுள்ளது.

பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன்.  இனி கடமை இருக்கிறது இது ஒரு நாள் கொண்டாட்டம் இல்லை, இந்த வாழ்கை முறையில் சந்தோஷத்துடன் பொறுப்பும் வந்து சேர்ந்திருக்கிறது என தெரிவித்தார் 

மேலும் நான் அறிவுரை சொல்லும் தலைவன் இல்லை அறிவுரை கேட்கும் தொண்டன் என்றும் கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.