67 வயது வரை பெண்களை அரைநிர்வாணமாக வைத்து படம் எடுத்து சம்பாதித்து விட்டு, அரசியலுக்கு வந்து வேடம் போடுபவன் அல்ல நான் என்று பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.  

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; காந்தியின் படுகொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. கோட்சே உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று யாராவது போராடினார்களா? ஆனால், ராஜீவ்காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள். யார் தீவிரவாதி. காந்தி படுகொலை முன்பு பயங்கரவாதமே இல்லையா?

மேற்கு  வங்காளத்தில் நவக்காளியில் ஏராளமான இந்துக்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள். அதை பற்றி கமல் பேசினாரா? கமல் போன்று 67 வயது வரை பெண்களை அரைநிர்வாணமாக வைத்து படம் எடுத்து சம்பாதித்து விட்டு, அரசியலுக்கு வந்து வேடம் போடுபவன் அல்ல நான் என்றார்.

நான் 7 வயதில் இருந்தே அரசியலில் இருக்கிறேன், மக்களுக்காக போராடி இருக்கிறேன். ஆனால், கமல் ஒரு விஷச்செடி. அது முளையிலேயே அழிக்க வேண்டிய தீயசக்தி என்றார்.  

காந்தி தென் ஆப்பிரிக்கா செல்லும் போது, தனது தாய்க்கு மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பிற பெண்களை தவறாக பார்க்க மாட்டேன் என 3 உறுதிகளை கொடுத்தார். அவற்றை கடைபிடிக்காதவர், காந்தியின் கொள்ளுப் பேரனா? காந்தியின் கொள்ளுப்பேரனாகும் தகுதி ஹெச்.ராஜாவுக்கு உண்டு. ஆனால், கமல்க்கு இல்லை. மனைவிக்கோ, கணவருக்கோ ஒழுக்கமாக இல்லாதவர் மக்களிடம் நேர்மையாக இருக்க முடியாது. 

எனவே, ஒழுக்கம், நேர்மை இல்லாத கமல்ன் கட்சிக்கு போடும் ஓட்டு நேர்மைக்கும், தூய்மைக்கும் வைக்கும் வேட்டு. கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படி பேசியிருக்கிறார்.

எனவே, கமல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை அசிங்கப்படுத்த நினைத்தால், அவரை தோலுரித்து காட்டாமல் விடமாட்டோம். நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள் யாராவது கமல்ஹாசனை ஆதரிக்கிறார்களா? நான் உண்மையை கூறினால் சர்ச்சை என்பார்கள். 

கமல் இந்துக்களை சீண்டுவதால் தான் அவரை பற்றி பேசுகிறேன். முஸ்லிம், கிறிஸ்தவ மதத்துக்கு கொடுக்கும் மரியாதையை இந்து மதத்துக்கும் கொடுக்க வேண்டும். அது குறைந்தால் எதிர்வினை இருக்கும். இந்துக்களை சீண்டினால், கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திருவிளையாடல்களை மக்கள் முன்பு வைக்கப்படும். அதற்கு 2 பேரை பற்றி சொன்னாலே போதும். அவர்களுக்கு கமல் நேர்மையாக நடந்தாரா?  கமலை மக்கள் நம்பக் கூடாது  என்றார்.