பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா? என கேள்வி எழுப்பி மீண்டும் தமிழ் சார்ந்த விவாதத்தை கிளப்பியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. 

சமூக வலைதளங்களில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவிடும் ஒவ்வொன்றும் சர்ச்சையாகி வருகிறது. பொது இடங்களில் மிக கடுமையான இழிசொற்களால் எச். ராஜா பேசிய பல விவகாரங்கள் பூதாகரமாக வெடித்தும் இருக்கின்றன. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்து தரம் தாழ்ந்து எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அடுத்த சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் வளர்த்தது யார்? தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம் பெரியபுராணம் ஆனால், இம்மாதிரியாக எந்த ஒரு படைப்புமில்லாமல் வேலைகாரி, ஓடிப்போனவள் போலீஸ்காரன் மகள், ஓரிரவு எழுதியவர்களெல்லாம் தமிழ் பக்தர்களா?’’எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

 

வேலைகாரி, ஓடிப்போனவள் போலீஸ்காரன் மகள், ஓரிரவு ஆகிய நூல்களை எழுதியவர் அறிஞர் அண்ணா. இதனால், திமுக தொண்டர்கள் ஹெச்.ராஜா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.