தேவர் பெருமானாரின் குருபூஜையில் திருநீறை தட்டி கீழே கொட்டிய நீங்கள் குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா? பாஜக நிர்வாகி  ஹெச்.ராஜா, திமுக எம்.பி., கனிமொழிக்கு ஏள்வி எழுப்பியுள்ளார்.

 

ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?’’என கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஹெச்.ராஜா, ‘’முதலில் தேவர் பெருமானாரின் குருபூஜையில் திருநீறை தட்டி கீழே கொட்டிய நீங்கள் குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா என்று சொல்லுங்க’’ என பதிலடி கேள்வி எழுப்பி இருந்தார். 

இதுகுறித்து ஹெச்.ராஜாவிடம், ‘’எதை கேட்டாலும் சுத்தி சுத்தி கடைசில வந்து நிக்குற இடம் மதம்... மதத்தை விட்டா வேற எதுவும் தெரியாதா ராஜா ஐயா...’’கேள்வி எழுப்பி இருந்தார் நெட்டிசன் ஒருவர். இதற்கு பதிலளித்துள்ள ஜெ.ராஜா, ‘’இதே கேள்வியை திருமதி.கனிமொழி அவர்களிடம் கேளுங்கள்’’ என பதிலளித்துள்ளார்.

 

கனிமொழிக்கு பதிலளித்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘’அப்போ உங்கள் தந்தை காலஞ்சென்ற கருணாநிதி 55 வருட அரசியல் பணியில்  தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள். ஆகையால் தான் இப்போது எங்களிடம் இந்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுள்ளீர்கள். நன்றி. இப்போது புரியுதா,  பாஜக வை பற்றி?’’ என பதிலளித்துள்ளார்.