உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

திமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, விசிக, இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சாலை மறியல், ரயில் மறியல், சுங்கச்சாவடி முற்றுகை என பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் 12ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டால், நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என பதிலளித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பிரதமர் அவர்கள் சென்னை வரும்போது திமுக கருப்புக்கொடி காட்டும் என ஸ்டாலின் அறிவித்துள்ளது கருப்பு துக்ககரமானது என்கிற ஆங்கிலேயர்களின் மனநிலையை காட்டுகிறது. நம் பண்பாட்டை பொருத்தவரை கருப்பு மங்களகரமானது. சுமங்கலிப் பெண்கள் கருகமணி அணிவது நம் பண்பாட்டின் அம்சமாகும் என பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">பிரதமர் அவர்கள் சென்னை வரும்போது திமுக கருப்புக்கொடி காட்டும் என ஸ்டாலின் அறிவித்துள்ளது கருப்பு துக்ககரமானது என்கிற British mindset ஐயே காட்டுகிறது. நம் பண்பாட்டை பொருத்தவரை கருப்பு மங்களகரமானது. சுமங்கலிப் பெண்கள் கருகமணி அணிவது நம் பண்பாட்டின் அம்சமாகும்.</p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/983316715483222017?ref_src=twsrc%5Etfw">April 9, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

கருப்பு என்பது மங்களகரமானது தான். அதனால் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை பிரதிபலிக்கும் விதமாக அவரது டுவீட் அமைந்துள்ளது.