திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட 8பேரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்துள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமையன்று தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஹெச். ராஜா உள்ளிட்டோர் மீது பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், அவர்களை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டுள்ளன. இதனிடையே, பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட 8பேரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்துள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவான ஹெச்.ராஜாவை போலீஸ் வலைவீசித் தேடி வருகிறது.