தமிழகத்திற்கு காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஒன்றாம் தேதி மற்றும் 6ம் தேதி என இருமுறை, திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், முழு அடைப்பு போராட்டம், காவிரி உரிமை மீட்பு பயணம், பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி, ஆளுநரிடம் மனு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">இன்று திமுக வின் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்திற்கு காவிரி நீர் தர தொடர்ந்து மறுத்து வரும் சித்தராமையா வின் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இல்லையெனில் திமுக தமிழகத்திற்கு துரோகம் செய்வது வெட்ட வெளிச்சமாகும்</p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/985709952189612032?ref_src=twsrc%5Etfw">April 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த நிலையில், இந்த கூட்டம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இன்று திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் திமுக தமிழகத்திற்கு செய்யும் துரோகம், வெட்ட வெளிச்சமாகும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.