பாஜக தேசிய தலைவராக பதவி வகித்து வந்த ஹெச்.ராஜா அந்தப்பதிவ்யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் தேசிய அளவில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளார். அந்தப்பட்டியலில் தேசிய அளவில் இணை செயலாளர்கள், துணைச் செயாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த புதிய பட்டியலில் தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கெல்லாம் பாதவி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவருக்கும் பதவி வழங்கப்படவில்லை. 

ஏற்கெனவே தமிழகத்தில் தேசிய செயலாளராக இருந்த ஹெச். ராசா பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜா போன்றவர்கள் தமிழகத்தில் இருந்து தேசிய தலைவரகளாக இடம்பெற்றிருந்த நிலையில், தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பாஜக புறக்கணித்துள்ளது.