மதரசாவிற்கு எதிரில் சாலேயில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதினால் கைதா? என அதிமுக அரசாங்கத்திற்கு எதிராக கொதித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி, முருகப்பெருமானை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. இதனையடுத்து பெரியாரிஸ்டுகள்- இந்து மத உணர்வாளர்களிடையே இணையதளம் வாயிலாக மோதல் மூண்டது.

 

இந்நிலையில் மதராசாவிற்கு எதிரில் சாலேயில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’கோவில்கள் முன்பாக இந்து விரோதி ஈ.வெ.ரா சிலைகள் இருக்கலாம். மதரசாவிற்கு எதிரில் சாலேயில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதினால் கைதா? தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது. இது இந்துக்களுக்கு சவால்’’ எனத் தெரிவித்துள்ளார். 

பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் அந்த அரசிற்கு எதிராக இந்து மத விவகாரத்தை ஹெச்.ராஜா கிளப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.