எச். ராஜா, சீமான் ஆகியோர் தமிழக அரசியலுக்கே ஒரு சாபக்கேடு... டார்டாராக கிழித்த ஜெயக்குமார்.
எச். ராஜா மற்றும் சீமான் ஆகியோர் தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடு என தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எச். ராஜா மற்றும் சீமான் ஆகியோர் தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடு என தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக சீமானை காவல்துறை உடனடி கைது செய்ய வேண்டும் என்றும்அவர்வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: கோயில்களுக்கு தமிழில் பெயர்.. அடுத்த அதிரடியில் அமைச்சர் சேகர் பாபு..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜாவும் தொடர்ந்து மேடையில் வன்முறையை தூண்டும் வகையிலும், தனி மனித தாக்குதல் இடம் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல்வாதிகள் என்பவர்கள் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும், அப்படிப்பட்டவர்கள்தான் அரசியல்வாதிகளாக இருக்க முடியும், ஆனால் சீமான் பேச்சு, ராஜா போன்றவர்களின் பேச்சுக்கள் அரசியல் நாகரிகம் இன்றி கீழ்தரமாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்: தமிழுக்காக பேசும் பிரதமர் மோடிக்கு இந்ந தமிழகம் என்ன கைமாறு செய்யப்போகிறது.. அண்ணாமலை உருக்கம்.
கடந்த 2019ஆம் ஆண்டு மேடையில் பேசிய சீமான், ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பேசியதும், பின்னர் தமிழகத்திலுள்ள காங்கிரஸார் அனைவரும் ராஜீவ் காந்திக்கு பிறந்தவர்களா என்று பேசிய பேச்சுக்கள் கண்டனத்துக்குரியது என்றார். இது போன்ற அநாகரீக பேச்சுக்களைத் தொடர்ந்து மேடைகளிலும், பொது வெளிகளிலும் பேசிவரும் எச்.ராஜா, சீமான் போன்றவர்கள் எல்லாம் தமிழக அரசியலுக்கு ஒரு சாபக்கேடு என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் சீமான் மற்றும் எச். ராஜாவை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி உறுதி அளித்துள்ளதாகவும் ஜெயக்குமார் கூறினார்.