Gujarat and himachal pradesh BJP leading

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

கடந்த, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பின், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், பெரும்பாலானவற்றில், பாஜகவே வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள, இமாச்சலப் பிரதேசத்திலும், பா.ஜ., ஆட்சியில் உள்ள குஜராத்திலும், சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. இவற்றில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதல்கட்டமாக இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குஜராத் மாநிலத்தில் 78 தொகுதிகளுக்மேல் முன்னிலையிலும், காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 18 தொகுதிகளில் பாஜகவும், 10 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகிக்கின்றன. இங்கு காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கிறது.