ஒருவேளே வரியை குறைக்க மத்திய அரசு முன்வந்தால், மாநில அரசுகளின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என்பதால், இடியாப்பச்சிக்கல் நிறைநத் கூட்டமாகவும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஆட்டமொபைல் துறையில் விற்பனை சரிந்து உற்பத்தியை நிறுத்தும அளவுக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதிகமான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன


இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவா நகரில் வரும் 20-ம் தேதி நடக்கஉள்ளது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்ேகற்பார்கள்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ேவகமாக நுகரும் பொருட்களான எப்எம்ஜி பொருட்களான பிஸ்கட் முதல் ஆட்டோமொபைல் துறை, ஓட்டல்கள் என பல்வேறு துறைகள் வரிச்சலுகை கேட்டு அழுத்தம் கொடுக்கிறார்கள். பொருளாதார சரிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

மக்களிடம் நுகர்வே அதிகப்படுத்தி, உள்நாட்டு தேவையை அதிகப்படுத்த வேண்டிய அவசியத்தில் மத்திய அரசு இருக்கிறது. அதற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு அவசியம்
ஆனால் ஜிஎஸ்டி வரியால் இந்த பொருளாதார சரிவு ஏற்படவில்லை, பொருளாதார அடிப்படையிலும், சுழற்ச்சியிலும் பிரச்சினை இருக்கிறது ஆதலால் வரியை குறைத்தால் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் வலியுறத்துகின்றன. ஆதலால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இப்போதுள்ள நிலையில் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு இழப்பீட்டு நிதியில் இருந்து மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால்,ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால், மாநிலங்களுக்குச் செல்லும் இழப்பீட்டு நிதியளவு குறையும் என்பதால், ஜிஎஸ்டி வரியைக் குறைக்க எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.

ஒரு புறம் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப வேண்டிய கட்டாயம், மறுபுறம் சரிந்து கிடக்கும் பல்வேறு நிறுவனங்களை ஊக்கப்படுத்த வரிச்சலுகை கொடுக்க வேண்டும், மாநிலங்களின் எதிர்ப்பு என மும்முனை தாக்குதலுடன் ஜிஎஸ்டி கவுன்சில் நடக்க இருக்கிறது.