Asianet News TamilAsianet News Tamil

விஜய் தந்த வெற்றி பார்முலா ஜி.எஸ்.டி.! அண்ணாதுரையிலும் தொடருகிறது!

GST in Annadurai
GST in Annadurai
Author
First Published Nov 16, 2017, 5:42 PM IST


பல்வேறு தடைகள் தாண்டி தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம், வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் மெர்சல் படத்துக்கு ஆதரவாக  குரல் கொடுத்து வருகின்றனர்.

GST in Annadurai

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்து மெர்சல் படத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர்களின் எதிர்ப்பால் பட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் படம் எதிர்பார்த்ததைவிட பல கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது. 

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர உள்ள அண்ணாதுரை படத்தில், வரும் பாடல் ஒன்றுக்கு, சென்சார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எமன்  படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். 

GST in Annadurai

அண்ணாதுரை படத்தில் வரும் பாடல் ஒன்றில் ஜி.எஸ்.டியா மாறி நீயும் என்ன வச்சி செய்யிற... எனத் தொடங்கும் பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த வார்த்தை இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜி.எஸ்.டி. என்ற வார்த்தைக்கு பதில்
இ.எம்.ஐ. என மாற்றம் செய்யப்பட்டு பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான அண்ணாதுரை ஆடியோ சிடியில் இதே வார்ததைகள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ள பாடலில் வார்ததைகள் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios