Asianet News TamilAsianet News Tamil

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி!!

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகளை இனி மாநிலங்கள் ஏற்றுக்கொள்வது சட்டத்திற்காக அல்ல, விருப்பத்திற்காக மட்டுமே இருக்கும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

gst council is not obliged to accept the recommendation says palanivel thiyagarajan
Author
Madurai, First Published May 19, 2022, 9:04 PM IST

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகளை இனி மாநிலங்கள் ஏற்றுக்கொள்வது சட்டத்திற்காக அல்ல, விருப்பத்திற்காக மட்டுமே இருக்கும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி.யில் முழு மாற்றங்கள் தேவை. மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. பரிந்துரைக்க முடியுமே தவிர, அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தியுள்ளது. அமைச்சரவை உரிமை, ஆளுநர் உரிமை குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில சட்டமன்றங்களை கட்டுப்படுத்தாது என்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டமன்ற முடிவுகளை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியது.

gst council is not obliged to accept the recommendation says palanivel thiyagarajan

இரு அடுத்தடுத்த தீர்ப்புகளும் மாநில உரிமையை நிலை நாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து அளித்த 2 தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகள், சட்டமன்ற உரிமைகளை எடுத்துக்கூறியுள்ளது. இது ஒரு திருப்புமுனை என பேசினார். இன்று வரை ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டே வருகிறோம். இனி மாநிலங்கள் அதனை ஏற்றுக்கொள்வது சட்டத்திற்காக அல்ல, விருப்பத்திற்காக மட்டுமே இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.

gst council is not obliged to accept the recommendation says palanivel thiyagarajan

அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ள விஷயங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை பிடிக்கவில்லை என்றால் ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை பரிசீலனைகளை மட்டுமே கொடுத்தது. அரசியலமைப்பு சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஜிஎஸ்டியால் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. பலன் கிடைகாததற்கு காரணம் செயல்பாடா அல்லது திட்டமிடுதலா அல்லது அடிப்படை கொள்கையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் எந்த ஒரு பரிந்துரைகளையும் மாநில அரசுகள் அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios