Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம்.. தமிழக அரசு அதிரடி!

கொரோனா தொற்றைக் கட்டுபடுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
 

Group led by MK Stalin.. important place for former minister Vijayabaskar.. Tamil Nadu government action!
Author
Chennai, First Published May 16, 2021, 9:48 PM IST

கொரோனாவைக் கட்டுபடுத்துவது தொடர்பாக தமிழக அரசு, சில தினங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட ஓர் ஆலோசனை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Group led by MK Stalin.. important place for former minister Vijayabaskar.. Tamil Nadu government action!
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் எண்.4) நிறைவேற்றப்பட்டது.  'நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டப்பேரவை கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது'. இத்தீர்மானத்தின்படி அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வரின் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.Group led by MK Stalin.. important place for former minister Vijayabaskar.. Tamil Nadu government action!
இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மருத்துவர் எழிலன் (திமுக), மருத்துவர் விஜயபாஸ்கர் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), மருத்துவர் சதன் திருமலைக்குமார் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (சிபிஎம்), ராமச்சந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios