Asianet News TamilAsianet News Tamil

தமிழக பகுதியை நோக்கி தரைக்காற்று.. 27 மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை.

அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Ground winds blowing towards Tamil Nadu .. Skull splitting in 27 districts .. Weather Center warning.
Author
Chennai, First Published Apr 2, 2021, 5:27 PM IST

தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் 

02.04.2021 முதல் 04.04.2021 வரை:  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Ground winds blowing towards Tamil Nadu .. Skull splitting in 27 districts .. Weather Center warning.

05.04.2021: கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல்  1200  முதல் பிற்பகல்   0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை   தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். வெப்பச்சலனம் காரணமாக 02.04.2021: தமிழகத்தில் மதுரை, சிவகங்கை விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும் . ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.

03.04.2021 முதல் 06.04.2021 வரை: தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28  டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

Ground winds blowing towards Tamil Nadu .. Skull splitting in 27 districts .. Weather Center warning.

கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு (சென்டிமீட்டரில்): 

காமாட்சிபுரம்  (திண்டுக்கல்) 3, சங்கரிதுர்க்  (சேலம்), மதுரை  வடக்கு  தலா  2 .தல்லாகுளம்  (மதுரை), திண்டுக்கல், மதுரை  தெற்கு, போடிநாய்க்கனுர்  (தேனி), ஆண்டிபட்டி  (தேனி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

நேற்று அந்தமான் கடல் பகுதியில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை  கரற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த  24  மணி நேரத்தில் ஆழ்ந்த கரற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக 02.04.2021,03.04.2021 : அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

02.04.2021 முதல் 04.04.2021 வரை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .02.04.2021, 03.04.2021 : தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இருபகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios