graduates compete for high court cleaning work

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான துப்புரவாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

எட்டாம் வகுப்பை தகுதியாக கொண்ட இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 3,000 பேரில் எழுத்துத் தேர்வில் 2,500 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஏ., ஆகிய பட்டப்படிப்புகளை படித்த பட்டாதாரிகள்.

பொறியாளர்களும், முதுநிலை பட்டதாரிகளும் துப்புரவுப் பணிக்கு போட்டி போடும் அளவிற்கு பட்டதாரிகள் வேலையில்லா கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வைக் கண்டு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அதிர்ந்து போயுள்ளனர். எட்டாம் வகுப்பைத் தகுதியாக கொண்ட துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகளும் முதுநிலை பட்டதாரிகளும் போட்டி போடுவது என்பது அவர்களுக்கான வேலைவாய்ப்பின்மையை காட்டுவதோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களின் வேலைவாய்ப்பை சிதைக்கும் நிகழ்வாகவும் உள்ளது.

இச்சம்பவம், மக்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.