புரிதல் இல்லாதவர் ஆளுநர்.. திராவிட மாடல் எங்கள் இனத்தின் குறியீடு.. அமைச்சர் மனோ தங்கராஜ்..!
ஆன்லைன் ரம்மி ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த தமிழ்நாட்டை பொறுத்தவரை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசும் இதை நோக்கத்துடன் வந்தால் தான் ஒன்றுபட்டு மக்கள் பிரச்சினைகளை தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும்.
திராவிட மாடலை எக்ஸ்பயர் பண்ண வேண்டியது என்பது ஆளுநரின் திட்டம் அதனால் தான் அவர் அப்படி பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் இளைய தலைமுறையினரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக G20 Startup20X நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்;- திராவிட மாடலை எக்ஸ்பயர் பண்ண வேண்டியது என்பது அவருடைய திட்டம். அதனால் தான் அவர் அப்படி பேசுகிறார். திராவிட மாடலை பற்றி ஒரு புரிதல் வேண்டும் இன்றைக்கு நாங்கள் ஏன் திராவிட மாடல் என்று சொல்கிறோம் என்று சொன்னால் அது எங்களுடைய இனத்தினுடைய குறியீடு என்பது ஒரு புறம் ஆனால் இந்திய துணை கண்டத்தில் கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு அனைத்தும் மறுக்கப்பட்டு ஒரு வர்க்க சமூகம் கட்டமைக்கப்பட்டது ஜாதியின் அடிப்படையில் அந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம் என்பது திராவிட இயக்கங்களின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது எனவே சமூக நீதியை எல்லோரையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய திட்டங்களை உள்ளடக்கி இருக்கக்கூடிய அந்த மாடலின் பெயர் தான் திராவிட மாடல்.
இது ஒரு மேஜிக்கல் நேம் அல்ல. இது பெரிய மாந்திரீக வார்த்தை ஒன்றும் இல்லை இது எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான வார்த்தை அனைத்து மக்களையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் அரசினுடைய பயன் கிடைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அளிக்கக் கூடிய ஒரு மாடல் திராவிட மாடல் என்றார்.
ஆன்லைன் ரம்மி ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த தமிழ்நாட்டை பொறுத்தவரை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசும் இதை நோக்கத்துடன் வந்தால் தான் ஒன்றுபட்டு மக்கள் பிரச்சினைகளை தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் செய்வார்களா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.