அதிமுக வின்  இரண்டு அணிகள்  இணைந்த பிறகு, தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்  செல்வத்திற்கும்,  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக  மாபா பாண்டியராஜனுக்கும் பதவி பிரமாணம் செய்து  வைக்க  தமிழக  பொருப்பாளுனர் வித்யா சாகர் ராவ்  நேற்று  சென்னை  வந்தார். பின்னர்  நேற்று  மாலை  இருவருக்கும்  பதவி பிரமாணம்  செய்து வைத்துவிட்டு  இன்று  மும்பை புறப்பட்டார்.

புதியதாக பதவி ஏற்ற  இருவருக்கும் ஆளுநர் வித்யா சாகர் ராவ், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  தெரிவித்தார் .

பின்னர்,  இன்று ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் மற்றும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும்  இன்று காலை ஆளுனரை சந்தித்தனர்.

பின்னர்  இன்று காலை 11.20   மணிக்கு,  ஆளுனர் மும்பை  புறப்பட்டார். அதாவது வந்த வேலையை   முடித்துவிட்டு மும்பை திரும்பினார்  ஆளுநர் வித்யா சாகர் ராவ்