கோவை மாவட்டம் சூலூர் நீலம்பூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரோட்டரி நடத்தும் உற்சவம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ‘இந்தியாவில் போலியோவை ஒழிக்க ரோட்டரி பாடுபட்டு உள்ளது. பாண்டிச்சேரியில் அனைவருக்கும் தடுப்பு ஊசி போடுவதற்கு ரோட்டரி போன்ற சேவை இயக்கங்கள் பெரிதும் உதவி செய்தனர். பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி அதற்கு காரணம் வீட்டில் கழிப்பறை வசதியில்லாததால் காரணம் அதை மாற்ற மோடி வீடுகள் தோறும் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார். அனைவரும் தாய் மொழியை முதன்மையாகக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாய் மொழி கற்றுக் கொள்வது முதலில் தாய் பாலை பிறந்த குழந்தை முதலில் அருந்துவது போன்றது தாய் மொழியை கற்றுக் கொண்டு பிற மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். 10 கோடிக்கு மேல் இன்றைய இளைஞர்கள் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் போதை ஒழிப்பிற்கு சேவைகள் செய்ய வேண்டும்’ என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கோவை மாவட்டம் தூய்மையான நகரங்களில் இந்தியாவில் ஒன்றாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நோய் தடுப்பூசியை பொது மக்களிடம் கொண்டு செல்ல மாநில அரசுகள் முழுமையாக செயல்பட்டுள்ளன. மத்திய அரசும் அதற்கான ஏற்பாட்டைச் செய்தது. இதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. அனைவரும் அனைவரும் பூஸ்டர் தோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நோய் தொற்றால் இறந்தவர்கள் அதிகம் என தவறான தகவல்கள் உலக அமைப்புகளால் சொல்லப்பட்டு வருகிறது. அது முற்றிலும் தவறானது. இறப்பு விகிதங்களை சரிவர மத்திய அரசு கையாண்டு வருகிறது. நோய் தொற்று பரவலை வெற்றிகரமாக இந்தியா எதிர்கொண்டுள்ளது. தமிழக அரசு ஓராண்டு தமிழகத்தில் நிறைவு செய்து உள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு பாடுபடவேண்டும். தமிழகத்தில் தாய்மொழி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். திராவிட மாடல் என சொல்வதற்கு பதிலாக தமிழில் திராவிட மாதிரியான சொன்னால் நன்றாக இருக்கும். புதிய கல்விக் கொள்கை மூலம் தாய் மொழியை கற்றுக் கொண்டு பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : திமுகவின் முக்கிய விக்கெட்..தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜகவுக்கு தாவும் எம்.பி திருச்சி சிவா மகன்

இதையும் படிங்க : நான் ஜெயலலிதாவின் போன்று ஆட்சியை தருவேன்.. இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு திகில் காட்டும் சசிகலா !