Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் முக்கிய விக்கெட்..தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜகவுக்கு தாவும் எம்.பி திருச்சி சிவா மகன்

தமிழகத்தில் பாஜகவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏராளமான அதிரடிகளை எடுத்து வருகிறார். அது பாஜகவினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

DMK MP Trichy Siva son Surya joins Tamil Nadu BJP
Author
Tamilnadu, First Published May 7, 2022, 2:45 PM IST

பாஜகவில் எதிர்பார்த்தபடியே கட்சி நிர்வாகிகள் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல் கட்டமாக பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட பார்வையாளர்கள், துணை தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 420 பொறுப்புகள் பாஜகவில் ஒவ்வொரு 3 ஆண்டுங்களுக்கும் மாற்றப்படும்.

DMK MP Trichy Siva son Surya joins Tamil Nadu BJP

அதன் அடிப்படையில்தான் இந்த முறையும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. இதில் முழுக்க முழுக்க அண்ணாமலை ஆதரவாளர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதோடு மற்ற மூத்த நிர்வாகிகளுக்கான நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலச் பார்வையாளர்களாக கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்.

இணைப் பொருளாளராக எம்.சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜகவின் கலை கலாச்சார பிரிவினுடைய மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், தனது அணி நிர்வாகிகள் சிலரை நீக்கினார். அண்ணாமலை அனுமதி இல்லாமல் இவர்களை நீக்கியதாக கூறப்பட்டது. மேலும் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்தது உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு பாஜகவுக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பாஜக திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு மூவ் அண்ணாமலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலே அது.  திமுகவின் முன்னணி தலைவர்களில் கொள்கை ரீதியாக களமாடுபவர்களில் முக்கியமானவர் திருச்சி சிவா. 

DMK MP Trichy Siva son Surya joins Tamil Nadu BJP

அவரது மகனையே தங்கள் கட்சிக்கு கொண்டு வந்தால் பல விஷயங்களில் திமுகவுக்கு தண்ணி காட்டலாம் என அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.  விரைவில் அண்ணாமலை தலைமையில் சூர்யா பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக தலைமை தன்னை அங்கீகரிக்காததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : நான் ஜெயலலிதாவின் போன்று ஆட்சியை தருவேன்.. இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு திகில் காட்டும் சசிகலா !

இதையும் படிங்க : பட்டப்படிப்பு சான்றிதழ் வாங்க 10,000 கட்டுங்க..அத்துமீறும் அண்ணா பல்கலைக்கழகம்..சரமாரி கேள்வி கேட்ட அன்புமணி !

Follow Us:
Download App:
  • android
  • ios