governor gives 7 days to bjb

கர்நாடாகவில் கடந்த 14ஆம் தேதி சட்டமன்ற 222 தொகுதிகளுக்கு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 40 மையங்களில் இன்று காலை எட்டு மணிமுதல் தொடங்கியது. 

தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அதன்பின் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. பின் காங்கிரஸ் மற்றும் மத்திய ஜனதா தளம் இரண்டின் முன்னிலையை விட பா.ஜ.க முன்னிலை வகித்தது.
இந்நிலையில் பா.ஜ.க 112 தொகுதில் வென்றால்தான் தனிப்பெரும்பான்மை கிடைக்கும்.

தற்போது வரை பா.ஜ.க பெறாதாதால் கர்நாடகத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் 78 தொகுதியிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது

காங்கிரஸ் தலைமை குலாம் நபி ஆசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்படிக்கை ஏற்றபட்டதில் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 

இந்நிலையில் பா.ஜ.கவின் எடியூரப்பா அதிக தொகுதியில் வென்றதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதற்கு ஆளூநர் பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தந்துள்ளார்.

தனிப்பெரும்பான்மையை கட்டாயம் பா.ஜ.க நிரூபிக்கும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.