நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 6 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை தவிர அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

நீட் விலக்கு மசோதாவில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 6 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை தவிர அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில்;- நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு. நீட் விலக்கு மசோதாவில் குறைகள் இருப்பின் அரசு அதனை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநருக்கு வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும். மேலும் நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அரசு தீர்வு காணவேண்டும் அரசுக்கு சி.வி.சண்முகம் அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில்;- நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை. அதிமுக அரசு கையாண்ட விதத்தில்தான், திமுக அரசு நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமைதான் வெளிப்பட்டுள்ளது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.