10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.