அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
.
இதுகுறித்த அவரது உரையில், ‘’குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
அரசுப் புறம்போக்கு நிலங்களைப் பாதுகாக்கவும் நிலம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கவும் துல்லியமான புவியிடங்காட்டி மூலம் நவீன நில ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.

அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும்; இதற்காக ரூ. 433 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
