Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை... தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி..!

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.

Government job for one person in every household ... DMK's election promise
Author
Tamil Nadu, First Published Oct 15, 2020, 10:21 AM IST

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது, பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. 

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். முதல் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது.Government job for one person in every household ... DMK's election promise

அப்போது குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை, போலீசாருக்கு வார விடுமுறை, அரசு மருத்துவமனைகளில் உயர் தரமான சிகிச்சை, பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு, முக்கிய கோவில்களில் கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.Government job for one person in every household ... DMK's election promise

ஏரி, குளங்களை துார்வரும் திட்டம், பராமரிக்கும் திட்டம், கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான திட்டம், கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது, கனிம வளங்கள், ஆற்று மணல் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது, பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்தும், குழுவினர் ஆலோசித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

Follow Us:
Download App:
  • android
  • ios