வரும் ஜனவரி 28ஆம் நாளன்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அன்று பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தமிழர்கள் மற்றும் முருக பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 28ஆம் நாளன்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அன்று பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தமிழர்கள் மற்றும் முருக பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கந்த சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசிய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் கடவுள் முருகனை மையப்படுத்தி தமிழக பாஜக வேல் யாத்திரை நடத்தி மத அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தமிழ் கடவுள் முருகனின் தைப்பூசத் திருவிழா அன்று விடுமுறை அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானை சிறப்பித்து தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூச திருவிழா.
இவ்விழா, தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங் களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக் கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28ஆம் நாள் என்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் இனி வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 5, 2021, 11:18 AM IST