அரசு பேருந்தில் அலுத்து சலித்து பயணம் மேற்கொண்டு வந்த மக்கள் இனி சொகுசாகன் பயணிக்கும் வகையில் வெளிநாட்டு தரத்திலான பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘’ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 500 மின்சாரப் பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்படும். 

மீனப்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழைத்தடம் நீட்டிப்பதற்காக சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 2ம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோ மீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும். மாதவரம் சோழிங்க நல்லூர் , மாதவரம்- கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மோ நீளமுள்ள வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என அவர் தெரிவித்தார்.