ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கிற்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக அம்மாநில அரசு மருத்துமனை தவறான மருத்துவ அறிக்கை தந்ததுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும்  சிகிச்சைகளும், பரிசோதனை முடிவுகளும் ஏனோதானோ என்றுதான் இருக்கும் என்பதை ராஜஸ்தான் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இன்று நிரூபித்துள்ளனர்.  ‘

ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யான் சிங்  அண்மையில்  உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு இரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது. பின்னர், தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் செய்த பரிசோதனைகளில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று ஏதுமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தனக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தவறான பரிசோதனை முடிவு தந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது உயர்மட்ட விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கல்யான் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தின் ஆளுநரையே அரசு மருத்துவமனை ஊழியர்கள் மெர்சலாக்கியுள்ள நிகழ்வு இந்தியாவையே கிடுகிடுக்க வைத்துள்ளது.