தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

முன்னதாக திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள், காணொளி காட்சி மூலமாக மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட உள்ளது. 

6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 3,000 பள்ளிகளில் அடுத்த மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார். 9 முதல் 12ம் வகுப்பு வரை நவம்பர் இறுதிக்குள் அனைத்து வகுப்பறையும் கம்யூட்டர் மயமாக்கப்படும். இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும். நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு 620 பள்ளிகளில் நவீன அளவில் அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது என்றார்.

 

மத்திய அரசு நடத்தும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் 132 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருந்தாலும் லட்சம் பேர் தான் பட்டயக் கணக்காளர்களாக உள்ளனர். எனவே தலைசிறந்த பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு, மாநிலத்தில் 25,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்களின் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.