‘ வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம்; தனித்துப் போட்டியிடுவோம். குறைவான சீட் பெற்றாலும் பரவாயில்லை, அதிகமான ஓட்டுகள் வாங்குவோம். மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக வந்தாலும் பரவாயில்லை. மீண்டும் பாஜக வந்திடக்கூடாது என்ற மைன்ட் செட்டில் சசிகலாவும் தினகரனும் உள்ளனர். எனவே, சட்டமன்றத் தேர்தலில் திமுக,வுடன் மறைமுகமான கூட்டணிதான்’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

அதன்படி, மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தினகரன் சென்னையில் உள்ளார். பிற நாட்களில் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் இல்ல விசேஷங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

தினகரன் மாஸ்டர் பிளான்களை அறிந்த பாஜக பிரமுகர்கள் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் ஆட்சியில் உள்ளவர்கள்.

அதன் முதல் நடவடிக்கையாகத்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். இதனையடுத்து அவசர அவசரமாக தமிழகம் வந்த   பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. சென்னை வந்தும், வராததுமாய் வந்த அமித்ஷா வேலையை ஒரே கட்டமாக முடித்துவிட்டு கிளம்பிச் சென்று விட்டார்.

அதுமட்டுமல்ல, விரைவில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், தமிழக அரசியல் சூழ்நிலைகளை அறிந்து சிலரை சந்திக்கவும் பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.