வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சர் விஜய பாஸ்கர் , அதற்கு தார்மீக பொறுப்பேற்று  உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல்   நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்றசாட்டுகள் எழுந்ததால்  தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மதுசூனனை ஆதரித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு நாள் ஓபிஎஸ் திடீரென தாமக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

அவர்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வாசன், மதுசூதனனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசன், வாருமான வரி சோதனைக்குட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தேர்தல் ஆணையம் முதலில் இருந்தே விழிப்புணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தினார்.

ஓபிஎஸ்சுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கப் போவதாகவும்,வழம் உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணியில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.