இதுக்காகவே எச்.ராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுங்க.. ஸ்ட்ரைட்டா மோடிக்கு கோரிக்கை வைத்த காயத்ரி ரகுராம்..!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். 

Give Padma Shri award to H. Raja... gayathri raghuram

தேசத்திற்கும் கட்சிக்கும் சேவை செய்து வரும் ஹெச்.ராஜாவுக்கு, பத்மஸ்ரீ அல்லது பத்ம பூஷன் விருது வழங்க வேண்டுமென நடிகை காயத்ரி ரகுராம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது;-  உலகில் 23 ஆண்டுகள் தொடர்ந்து நிர்வாகத்தை ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினரைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவராக்கியது பாஜக தான். 

இதையும் படிங்க;- நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்; ஆனால் சிவகங்கையில்... ஹெச்.ராஜா சொல்வது என்ன?

Give Padma Shri award to H. Raja... gayathri raghuram

மோடி அமைச்சரவையில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். சமூக நீதியை பாஜகதான் காப்பாற்றி வருகிறது என்றார். இந்நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் எச்.ராஜா கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Give Padma Shri award to H. Raja... gayathri raghuram

இந்நிலையில், பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், எச்.ராஜாவுக்கு  பத்மஸ்ரீ அல்லது பத்ம பூஷன் விருது வழங்க வேண்டுமென பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படிங்க;-  எம்ஜிஆர் குல்லா,கண்ணாடியோடு எடப்பாடி பழனிசாமி..! ஓ.பன்னீர் செல்வத்தின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா..?

Give Padma Shri award to H. Raja... gayathri raghuram

இதுதொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எச்.ராஜா அண்ணா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் எச்.ராஜா அண்ணா, தேசத்துக்கும் கட்சிக்கும் சேவை செய்யும் விருதுக்கு தகுதியானவர். குறிப்பாக அவர் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர் பத்மஸ்ரீ அல்லது பத்ம பூஷனுக்குத் தகுதியானவர். எச்.ராஜா அண்ணாவை கௌரவிக்க மரியாதைக்குரிய பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எச்.ராஜா அண்ணா, உங்கள் தேசத்திற்கான சேவை தொடர எனது வாழ்த்துக்கள் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios