Asianet News TamilAsianet News Tamil

கள்ளக் குறிச்சி மாணவிக்கு நீதி கொடுங்கள்.. தலைமை நீதிபதிக்கு திருமாவளவன் உள்ளிட்ட MP, MLA க்கள் கடிதம்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனிதம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கடிதம் எழுதி உள்ளனர். 

Give justice to the kallakurichi student.. MP, MLAs including Thirumavalavan wrote to the Chief Justice.
Author
First Published Sep 22, 2022, 2:42 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனிதம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,  கல்வியாளர் வசந்தி தேவி, கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம். சின்னதுரை உள்ளிட்டோர்  சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் விவரம் பின்வருமாறு:- மிகுந்த வேதனையுடனும் கவலையுடனும் இதில் கையெழுத்துப் போட்டுள்ள சமூக ஆர்வலர்கள் ஆகிய நாங்கள் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம். சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து போயுள்ள கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சம்பந்தப்பட்ட 5 எதிரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன்  மனுக்களில் ( எண்கள் 20088, 20135 / 2022) 26.08.2022  அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் சொல்லப்பட்டுள்ள சில அம்சங்கள் எங்களை மிகவும் கலக்கமடைய செய்துள்ளது.

Give justice to the kallakurichi student.. MP, MLAs including Thirumavalavan wrote to the Chief Justice.

இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்காத, சிபிசிஐடி போலீசாரின் புலனாய்வு விசாரணையிலிருந்து வருகின்ற ஒரு வழக்கில்,  மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி இறுதி முடிவை எடுத்துள்ளார். ஜாமின் மனு விசாரணையின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து உயர் நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்புகளுக்கு முரணாக இந்த உத்தரவு உள்ளது. குற்றம் தொடர்பான சாட்சி, ஆதாரங்கள் நிலை நிறுத்தப்பட வில்லை என்றும், இந்த குற்றம் வன்புணர்வோ, கொலையோ அல்ல என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ராசாவை விட்டு பாஜக தொண்டர்களை கைது பண்றாங்க.. தாய்மார்களே கோவைக்கு வாங்க.. அலறும் அண்ணாமலை.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மாணவியால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கள் தனது மகளுடையது அல்ல என மாணவியின் தாயார் மருத்துள்ள நிலையில், அந்த கடிதத்தை நீதிபதி ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் பள்ளியின் சுவற்றில் உள்ள ரத்தக் கரை அது பெயிண்டால் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் ரத்தம் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதியின் இந்த முடிவுகள், தேவையற்ற கருத்துக்கள் வழக்கின் இறுதி முடிவையும்,  விசாரணை நீதிமன்றத்தையும், புலன் விசாரணையையும் பாதிப்படைய செய்யும்.

Give justice to the kallakurichi student.. MP, MLAs including Thirumavalavan wrote to the Chief Justice.

ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அந்த மனைவியின் நோக்க எல்லைக்கும் அப்பால் சென்று வழக்கில் நீதியை நீதிபதி முடிவு செய்துள்ளார். இன்னும் இறுதி முடிவுக்கு உட்படுத்தப்பட்ருருக்காத பிரேத பரிசோதனை சான்றிதழ், வல்லுனரின் கருத்துக்களின் அடிப்படையில் மாண்புமிகு நீதிபதி அவர்கள் மேற்குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளார். சிறுமியின் பிறப்புறுப்பைச் சுற்றி காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழ் காணப்படவில்லை என்பதினால் வன்புணர்வு குற்றமே நடைபெறவில்லை என முடிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் 1 கோடி பரிசு... ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்து அமைப்பு நிர்வாகி கைது..!

பிரபலமான மதுர வழக்கில் 1979 ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட  உத்தரவில் தொடர்ச்சியாக 1983  ஆம் ஆண்டு வன்புணர்வு தொடர்பான குற்றங்களில் பாராளுமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் எங்கள் கவனத்திற்கு வருகின்றது. வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றம் தொடர்பாக ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து வந்த கருத்துகளில் 1983  ஆம் ஆண்டுக்கு பிறகு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்த அம்சங்களை நீதிபதி அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

Give justice to the kallakurichi student.. MP, MLAs including Thirumavalavan wrote to the Chief Justice.

எனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் மனுவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் காரணமாக பெரும்பாலான பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தங்களது நீதிமுறையான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மாண்புமிகு நீதி மன்றத்தின் தலைமை நீதியரசர் என்ற முறையில் இறந்து போன பள்ளி சிறுமியின் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக நேர்மையான சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios