இலங்கையை கைப்பற்றி தமிழீழத்தை உருவாக்கிய பின்னர் அந்நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் மத்திய அரசின் நிதி கொடுக்கலாம் என இயக்குனர், தமிழ் பேரரசு கட்சி கௌதமன் கூறியுள்ளார்.
இலங்கையை கைப்பற்றி தமிழீழத்தை உருவாக்கிய பின்னர் அந்நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் மத்திய அரசின் நிதி கொடுக்கலாம் என இயக்குனர், தமிழ் பேரரசு கட்சி கௌதமன் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இலங்கையில் வாழும் தமிழர்களை மீட்க தனித் தீர்மானத்தை இயற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, அந்நாட்டில் குழந்தைகளுக்கு பால் பாக்கெட் கூட கிடைக்காத அவளது நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்கு வழி இன்றி வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
ராஜபக்ச தலைமையிலான குடும்ப ஆட்சி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது. கடைகள் காலியாக உள்ளதால் மக்கள் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்படும் சூழல் அங்கு உருவாகி விட்டது. இலங்கையில் முற்றிலும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் வாழ வழியின்றி தமிழர்கள் கடல்மார்க்கமாக தமிழகத்திற்கு தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா கப்பல் மூலமாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் மற்றும் நிதி உதவிகளை செய்து வருகிறது. இலங்கையும் இந்தியாவின் உதவிக்கு நன்றி கூறி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் வ.கௌதமன் இலங்கையில் நிலவும் பொருளாதார சீர்குலைவு மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்படப்போகிற பாதிப்புகள் பற்றி இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு திட்டமிட்ட இனப்படுகொலை அங்கு நடந்தது. ஒட்டுமொத்தமாக தமிழ்னத்தையும் கொன்று குவித்தார்கள். இன்று பசிக்காக கொழும்பு வீதிகளில் குழந்தைகள் ஓடுகிறார்கள், தமிழகத்துக்கு 22 ஆயிரம் கோடி கொடுக்கவேண்டிய ஜிஎஸ்டி வரி பணம் கொடுக்காமல் இருக்கிறது மத்திய அரசு. இலங்கைக்குள் சீனர்கள் நுழைய பல முயற்சிகளை எடுத்து, ஒரு சில முயற்சிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
ஆனால் இதுவரையிலும் அதை தடுக்க ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும் இலங்கையில் நடைபெறுவதை வேடிக்கை பார்த்தால் நாளை உங்களுக்கும் இதே கதி தான் ஏற்படும் என்ற கவுதமன், பாதுகாப்பு படையை அனுப்பி அல்லது இலங்கை தமிழர்களை சிங்களர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பங்களாதேசை பாதுகாத்ததுபோல இலங்கைத் தமிழர்களை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் தனித் தமிழீழம் தேவை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு ஈழத்தமிழர்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறது. அதேபோல் இலங்கையில் வாழும் தமிழர்களை மீட்க தனி தீர்மானம் இந்த மானிய கோரிக்கையில் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
