வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ- ஜியோ அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தலைமை செயலக ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக தலை செயலக ஊழியர்கள் நாளை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதுகுறித்து கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தலைமை செயலக ஊழியர்கள் நாளை, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது. நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. அவசர காரணங்களுக்காக விடுமுறை எடுத்தால் அதன் உண்மை தன்மை ஆராயப்படும். மீறி விடுமுறை எடுப்பவர்கள்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ஜேக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட, தலைமை செயலக ஊழியர்கள், 30 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுன் உள்ளனர்.