திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12 ஆம தேதி நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைந்ததில் இருந்து தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து முறையிட்டார்.

இந்த நிலையில், செப்டம்பர் 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், என் கேள்விகளுக்கு பதலளிக்க முடியாமல் எதிரணியினர் என்னை தரமற்ற முறையில் விமர்சனம் செய்கின்றனர். 

ஜக்கையனைப் போல டிடிவி தினகரன் அணியிலுள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களாக எங்கள் அணிக்கு வருவார்கள். 

கட்சி விதியின்படி 5 இல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

என்று கூறினார்.