Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் பொது முடக்கம் கடுமையாக்கப்படுகிறது..? மருத்துவக் குழு பரிந்துரை

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம், மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
 

General freezing is tightening in Chennai ..? Medical Committee Recommendation
Author
Tamil Nadu, First Published Jun 15, 2020, 2:49 PM IST

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம், மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழு, சென்னையில் கொரோனா பாதிப்பைக் குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நோய்களை தடுப்பதற்கான வழிகள் குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசித்தோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும்.General freezing is tightening in Chennai ..? Medical Committee Recommendation

அரசு நடவடிக்கை எடுத்தாலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. சீனாவில் இரண்டாவது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்தில் மூன்று மாதத்திற்குப் பின் ஆரம்பிக்கலாம். சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருக்கிறது’’எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios