Asianet News TamilAsianet News Tamil

எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு நன்றி… வைரலாகும் காயத்ரி ரகுராமின் கடிதம்!!

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

gayathri ragurams letter to bjp goes viral
Author
First Published Jan 13, 2023, 11:20 PM IST

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். மேலும் அவரது டிவிட்டர் பதிவில், நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு… ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமா உள்ளிட்ட விசிகவினர் கைது!!

இந்த நிலையில் தற்போது அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

இதையும் படிங்க: எல்லாம் ஓகே! டெல்லியில் இருந்து வந்த சிக்னல்.. ஓபிஎஸ் குஷி! எல்லா பக்கமும் கேட்டா.? பதறும் எடப்பாடி!

என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளதோடு அந்த கடிதத்தை டிவிட்டரில் பகிர்ந்து அதில் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் டேக் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios