இது ஒன்னும் அவ்வளவு முக்கியமான ஹேஷ்டேக் இல்லை, ''இத்தனை டிவிட்டுகளும் காசு கொடுத்து காங்கிரஸ் கட்சி மூலம் டிவிட் போடப்பட்டது என நடன இயக்குனரும் பாஜக காயத்திரி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மோடிக்கு எதிராக இன்று காலை முதல் ''கோ பேக் மோடி'' (#gobackmodi) டேக் தேசிய அளவில் மட்டுமே டிரெண்ட் ஆனது.

காவிரிக்கு தமிழக மக்கள் மட்டுமே போராடுவதால் உலக அளவில் இது இடம் பிடிக்கவில்லை. ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்து டிவிட் செய்து வந்ததால் சில நிமிடத்தில் ஒட்டுமொத்தமாக பின்னுக்குத் தள்ளில் இந்திய அளவில் முதல் பிடித்தது. அதேபோல இந்த டேக்கில் கொஞ்ச நேரத்தில் மற்ற மாநில மோடிக்கு எதிராக உள்ளவர்களும் டிவிட் செய்ய தொடங்கினார்கள். தமிழக மக்கள் நேரமாக நேரமாக அதிகமாக டிவிட் செய்தார்கள். இதனால் உலக அளவில் 4ம் இடம்பிடித்தது. இப்படி திடீர் என்று மோடிக்கு எதிராக உலக அளவில் ஒரு டேக் வைரல் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.  இப்படியே போய்கொண்டிருந்த ட்விட்டர் டிரெண்டிங் டேக்  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து டிவிட் செய்யவே  .  அடுத்த சில நிமிடத்தில் இந்த டிவிட் உலக டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.

மெரினா போராட்டத்திற்குப் பின் உலக அளவில் இப்படி தமிழ் மக்கள் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்த நிலையில், இந்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi) என்ற ஹேஷ்டேக்கில் காங்கிரஸ் கட்சியால் காசு கொடுத்து டிவிட் செய்யப்படுகிறது என்று தமிழ் சினிமாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்த ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனதை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டினாலும் , பாஜக கட்சியினர் எதிர்த்துள்ளனர். முக்கியமாக தமிழ் சினிமாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் இந்த ஹேஷ்டேக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் எழுதும் மக்களை எல்லாம் அவர் கோபமாக திட்டி இருக்கிறார். 

இந்நிலையில் இதுபோன்ற ஹேஷ்டேக்குகளில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம் இது ஒன்னும் அவ்வளவு முக்கியமான ஹேஷ்டேக் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காயத்திரியின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு எதிர்ப்பு பதிவிட்டு வருகின்றனர். 

இதனையடுத்து காயத்திரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இளைஞர் ஒருவர், ''இப்போதே 6 லட்சத்துக்கு 77 ஆயிரம் பேர் ''கோபேக்மோடி'' ஹேஷ்டேக்கில் டிவீட் செய்து இருக்கிறார்கள். இன்னுமா இதை முக்கியமான ஹேஷ்டேக் இல்லை என்று சொல்கிறீர்கள். கணிணி வைத்து எல்லாம் பொய்யாக இத்தனை புது புது டிவீட்களை பண்ண முடியாது'' என நோஸ்கட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள காயத்திரி ரகுராம் ''இத்தனை டிவிட்டுகளும் காசு கொடுத்து காங்கிரஸ் கட்சி மூலம் ட் டிவிட் செய்யப்பட்டது. மக்கள் என்ன வேலையில்லாதவர்களா? வேலையில்லாதவர்கள்தான் அறிவில்லாத விஷயங்களுக்காக போராடுவார்கள்? ஏன் மக்களை இப்படி திசை திருப்புகிறார்கள்? என காட்டமாக எரிந்து விழுந்தார் காயூ.