எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கட்சியில் ஒருவரை சேர்ப்பதாக இருந்தாலும், நீக்குவதாக இருந்தாலும் அக்கட்சியின் தலைவர் அல்லது பொது செயலாளர் தான் முடிவு செய்வார். அதன் பிறகு தான் நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும். இதுதான் ஒவ்வொரு கட்சியிலும் இருந்து வருகிறது. ஆனால், பாஜவில் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பாஜக கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக வெளியிட்ட உத்தரவை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கட்சியில் ஒருவரை சேர்ப்பதாக இருந்தாலும், நீக்குவதாக இருந்தாலும் அக்கட்சியின் தலைவர் அல்லது பொது செயலாளர் தான் முடிவு செய்வார். அதன் பிறகு தான் நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும். இதுதான் ஒவ்வொரு கட்சியிலும் இருந்து வருகிறது. ஆனால், பாஜவில் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி கலை கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்களான ஃபெப்சி சிவா, நடிகர் பாபு கணேஷ், விருகை கணேஷ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, சர்மா, ரிஷி, உமேஷ் பாபு ஜெயபிரகாஷ் ஆகியோரை பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

இது தொடர்பாக புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக தான் மாநில தலைமையிடம் கொடுத்த பட்டியல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இந்த பட்டியலை மாற்றுவதில் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. எங்கள் தலைவர் அண்ணாமலை என் முடிவில் நிற்பார் என்று தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காயத்ரி ரகுராம், நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 01.02.2022 அன்று கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
