தெலங்கானா மாநிலத்தில் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். எப்படி கொலை செய்தீர்கள் என நடித்துக் காட்டியபோது, தப்பி ஓட முயன்றதால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து என்கவுண்ட்ட செய்த சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரியங்கா வீட்டுக்கு ஆளுநர் தமிழிசை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். ஆனால், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசகேர ராவ் இதுவரை செல்லவில்லை.

நாட்டையே உலுக்கிய கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் அளிக்க முதல்வரால் முடியவில்லையா?' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்நிலையில் பிரிங்கா கொலை வழக்கை என்ன செய்வது என்பது குறித்து சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனாரிடத்தில் சந்திரசேகர ராவ் விவாதித்து வந்துள்ளார்.

அப்போது கமிஷனரிடம் பேசிய சந்திரசேகர ராவ், இதுவரை நான் பிரியங்கா வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போகவில்லை. ஆனால் நாடன் அங்கு போகும்போது, பிரியங்காவின்   , பெற்றோர் மனம் சாந்தம் அடைந்திருக்க வேண்டும்... என்ன செய்யணுமோ செய்யுங்கள்.. என்று சற்று கோபமாக கூறியுள்ளார்.

இதன்பிறகுதான் போலீஸ் என்கவுண்டருக்கு திட்டமிட்டு காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளது, இதையடுத்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சைபராபாத் கமிஷனராக உள்ள சஜ்ஜனார் அதிரடிக்குப் பெயர் போனவர். வாரங்கலில், இவர் எஸ்.பி-யாக இருந்தபோது, கல்லூரி மாணவி ஷ்வப்னிகா மீது ஆசிட் வீசிய ஸ்ரீனிவாஸ், ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்ஸலைட் நயாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதும் இவர் சிறப்புப்படை ஐ.ஜி-யாக இருந்தபோதுதான். தற்போது, பிரியங்கா கொலையாளிகள் என்கவுன்டரையடுத்து, சஜ்ஜனாருக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிகின்றன.