கஜா புயல் தாக்கம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், கஜா புயலால் பாதிப்பிற்கு உள்ளாகி உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து தொடர்ந்து பேசிய முதலமைச்சர்... 5 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மரங்கள் சாய்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெருமளவு உயிர் சேதம் தடுக்கப்பட்டது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி கொடுப்பதற்காக நேற்றே நடமாடும் மருத்துவ குழு கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது...மாநில பேரிடர் குழு, தேசிய பேரிடர் குழு, நேற்றே வேதாரண்யம் மற்றும் கடலூர் மாவட்டத்தை அடைந்தனர்.

தற்போது பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு, உடை போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நிலைமையை சரிசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அதி விரைவாக செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்காக நாளை 5 அமைச்சர்கள், பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு செல்கிறார்கள்...அதன் படி அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மேற்பார்வையிட உள்ளனர்.

இது தவிர அந்தந்த மாவட்ட அமைச்சர்களும், பாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து அறிக்கை சேகரிக்க அதிகாரிகளின் உதவியுடன் முழு மூச்சில் இறங்கியுள்ளனர். 

அறிக்கை சமர்பித்த பின், தீவிர ஆலோசனை செய்து... நிதி தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசுக்கு சேதம் குறித்து தெரிவிக்கப்படும் என்றும்... குறைவாக சேதம் இருந்தால் அதனை மாநில அரசே சரி செய்யும் என முதலமைச்சர் தெரிவித்தார். அதே போல் இயற்கை சீற்றம் தடுக்க முடியாத ஒன்று என்றும்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர்,

இன்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியதாகவும் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவர் விசாரித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.